முதலமைச்சர் நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
“கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி”
– கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு.#DMK #DMKagainstCorona pic.twitter.com/3Msf4BXDLA
— DMK (@arivalayam) March 30, 2020
இந்நிலையில், கொரோனாவை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்கு ஆன்லைனில் நிதி வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.