பிளஸ் 2 துணைத்தேர்வு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!
பிளஸ் 2 துணைத் தேர்வு : தமிழகத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்க்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு துணைத் தேர்வுகள் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அது மட்டுமின்றி, துணைத் தேர்வு எழுத, மாணவர்கள் கடந்த மே 16ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், பலரும் துணைத்தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட்டை இன்று (19-06-24) பதிவிறக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மேலும், துணைத்தேர்வுக்கான தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.