ஸ்டைலாக முடி வெட்டதாய் மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவன்.!
- சீனிவாசன் என்ற சிறுவன் ஸ்டைலாக முடி வெட்டவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு தாய் மோகனா மறுப்பு தெரிவித்து சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார்.
- இதனால் மனமுடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வளசரவாக்கம் அருகே கைகான் குப்பம் பகுதியை சேர்ந்தவர் மோகனா. கணவரை பிரிந்து தனித்து வசித்து வருகிறார். மோகனா ஷூட்டிங் நடைபெறும் இடங்களில் சமையல் பாத்திரங்களை கழுவும் வேலையை செய்து வருகிறார்.
இவரது மகன் சீனிவாசன்(17).இவர் குன்றத்தூரில் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த சீனிவாசன் ஸ்டைலாக முடி வெட்டவேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.ஆனால் அதற்கு மோகனா மறுப்பு தெரிவித்து சீனிவாசனை சலூன் கடைக்கு அழைத்து சென்று சீனிவாசனின் விருப்பத்திற்கு மாறாக முடியை வெட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று முன்தினம் மோகனா வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளார்.