பிளஸ் 2 தேர்வு முடிவை தள்ளிவைக்க வேண்டும்; ஆசிரியர் சங்கம் கோரிக்கை.!
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தள்ளி வைக்கவேண்டும் என, ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச்-13 இல் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் சார்பில் நடத்தப்பட்டது. தேர்வுகள் மார்ச்-13 இல் தொடங்கப்பட்டு ஏப்ரல்-3 வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வரும் மே-5 ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தற்போது மே-5 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள இந்த பொதுத்தேர்வு முடிவுகளை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதை தள்ளிவைக்கவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.