#BREAKING: பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் !

மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது அனைத்து பள்ளி ,கல்லூரி மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்..? எப்படி நடைபெறும்..? என்று கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கிடையில் பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அவ்வப்போது அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும் கொரோனா சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆன்லைனில் நடைபெறாது, நேரடியாக நடைபெறும். மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ, உடல்நலமும் அவ்வளவு முக்கியம். கொரோனா எப்போது குறைகிறதோ அப்போது தேர்வு நடத்தப்படும். தொற்று பரவலை மனதில் கொண்டு தேர்வு நடத்தப்படும். மாநில அரசே பிளஸ் டூ பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும். தேர்வு 3 மணி நேரம் நடத்த வேண்டும் பள்ளியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர் என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024