ஆசிரியர் சங்கங்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வால் மாணவர்களின் சுமை அதிகரிப்பதாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில், இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ். “பிளஸ் 1 பொதுத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை வழக்கம் போல நடைபெறும். அந்த நடைமுறையில் இப்போது எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாநில கல்வி கொள்கை குழுவிடம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கிய நிலையில். இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு 12.30 மணி வரை நடந்தது. 10 மணி நேரத்திற்கும் மேலாக இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடக்க கல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தேர்வுத் துறை சங்கங்களை சேர்ந்த 74 சங்கங்கள் தங்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…