பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் ரத்து கிடையாது…அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.!!

Anbil Mahesh

ஆசிரியர் சங்கங்கள்  பிளஸ் 1 பொதுத் தேர்வால் மாணவர்களின் சுமை அதிகரிப்பதாக தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்து வந்த நிலையில், இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ். “பிளஸ் 1 பொதுத் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை வழக்கம் போல நடைபெறும். அந்த நடைமுறையில் இப்போது எந்த மாற்றமும் இல்லை.  ஆனாலும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாநில கல்வி கொள்கை குழுவிடம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 22 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கிய நிலையில். இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு 12.30 மணி வரை நடந்தது. 10 மணி நேரத்திற்கும் மேலாக இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடக்க கல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் தேர்வுத் துறை சங்கங்களை சேர்ந்த 74 சங்கங்கள் தங்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்