#BREAKING : பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது .
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பிளஸ் 1 தேர்வு மற்றும் .பிளஸ் 2 மறு தேர்வு முடிவுகள் வருகின்ற 31-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி,மாதம்,வருடத்தினைப் பதிவு செய்து , தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழே உள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பபடும் என்றும் தெரிவிக்கப்படும்.விடைத்தாள் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் & 12-ம் வகுப்பு மறு வாய்ப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்
-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.#ExamResults | #11thEamResults pic.twitter.com/yKoxp4a0oM— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 29, 2020