தீண்டாமை ஒழிப்பு தினத்தையொட்டி முதல்வர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு..!

நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.
நாளை மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நாளில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட காந்தியடிகள் நினைவாகத் தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025