இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை..!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனி மனித துதிபாடல்களுக்கோ, தங்கள் ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
எண்ணிலடங்கள் கொள்கை வீரர்களின் ரத்தம் சிந்திய தியாசுத்தாலும், வியர்வை சிந்திய உழைப்பாலும் உருவான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ் மக்களின் உயர்வும், தமிழ் நாட்டின் வளர்ச்சியும், சமத்துவ, சகோதர சமூகத்தினைப் கடக்கும் உன்னத நோக்கமும் தான் நம் இயக்கத்தின் இலக்குகள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் தான் நேற்றும், இன்றும், நாளையும் நமக்குத் தலைவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனி மனித துதிபாடல்களுக்கோ, தங்கள் ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை. எங்களது பெயர்களை பயன்படுத்திக்கொண்டு. தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடலடிக்கைகளை பூாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக அச்செயல்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கூறியதுபோல “மக்களிடம் செல்லுங்கள் மக்கள் சொல்வதைக் கேளுங்கள்; மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்’ தலைமைப் பண்பும், தகுதியும் தானாக உங்களைத் தேடிவரும்,
கழகத் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது, கழகத் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையிலும், சிலரது பெயர்களையும், படங்களையும் சிதைத்து அநாகரீகமான தகவல்களையும், உண்மைக்கு மாறான செய்திகளையும், சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வெளியிடுவது; அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும், புரியாமையாலும் கழகத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
கழக உடன்பிறப்புகளின் கவனத்திற்கு!!
கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். pic.twitter.com/ou6nIDLqa0
— அஇஅதிமுக (@ADMKofficial) May 23, 2021