தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் – தமிழிசை
புதுவை கடற்கரை சாலையில் ஒளவையார் விழா நடைபெற்றது. இந்த விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், வாயில் நுழையாத பெயரை பிள்ளைகளுக்கு பெற்றோர் சூட்டுவதாக குற்றசாட்டியதுடன், தமிழை படித்தால் தான் உயர்வு என்பதை அறிய வேண்டும். தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.