தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் – மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது என ராதாகிருஷ்ணன் தகவல்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது. தொடர்ந்து, மாஸ்க் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தயவு செய்து தடுப்பூசி போடாதவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார். மேலும், அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 24 முதலாமாண்டு மருத்துவ இடங்களை நிரப்புவது குறித்து உச்சநீதிமன்றம் அடிப்படையில் செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.