சென்னை : தமிழக மின்சார வாரியம் தற்போது தமிழ்நாடு மின் நுகர்வோருக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு இனி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது.
மேலும், இது 500 யூனிட் அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இப்படி வாட்ஸ் அப் செயலி மூலம் கட்டணம் கட்ட முடியும் என்றும் அப்போது அறிவித்து இருந்தனர். இதற்காக ‘9498794987’ என்ற இந்த அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் எண்ணையும் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர். தற்போது, இந்த அறிவிப்பை தொடர்ந்து பல பல எண்களில் இருந்து இந்த மின்சார வாரிய எண்ணிற்கு ‘ஹாய்’ (Hi) எனும் மெசேஜ்ஜை பலரும் அனுப்பி வருகின்றனர் என தெரிவித்து உள்ளனர்.
இப்படி ஹாய் என மெசேஜ் செய்ய வேண்டாம் எனவும், 500 யூநிட்டுக்கு மேல் பயன்படுத்திய நுகர்வோருக்கு மின்கட்டண லிங்க்கை நாங்களே உங்களுக்கு அனுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளனர். இதை குறித்து மின்சார வாரியம் அவர்களது X தளத்தில் ,”தற்போது, மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ள நுகர்வோருக்கு முதல் படியாக அவர்களது மின்கட்டண லிங்க்கானது அவர்களது வாட்ஸ்-அப் (Push) எண்ணிற்க்கு செய்தியாக அனுப்புவோம்.
நுகர்வோரின் வரவேற்பை பொறுத்து இது மேலும் மேம்படுத்தப்படும். எனவே, மின்வாரிய அதிகாரபூர்வ வாட்ஸ்-அப் எண்ணில் ‘ஹாய்’ என்று யாரும் மெசேஜ் செய்து பேச முயற்சிக்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்”, என்று இங்கனம் புதிதாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…