ஹெட்போனில் அதிக சத்தம் வைத்து கேம் விளையாடியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மரணம்..!
ஹெட்போனில் அதிக சத்தம் வைத்து கொண்டு கேம் விளையாடியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மாணவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
புதுச்சேரியை சார்ந்த தர்ஷன் என்ற 16 வயது மாணவன் ஆன்லைன் கேம் விளையாடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், தர்ஷன் நேற்று முன்தினம் 4 மணி நேரம் தொடர்ந்து ஹெட்போன் அணிந்து கொண்டு தனது வீட்டில் செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.
கேம் விளையாடி கொண்டு இருந்தப்போது திடீரென தர்ஷன் மயங்கி விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தர்ஷனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிசிக்கையாக அழைத்து சென்றுள்ளனர். ஆனால், தர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தர்ஷன் மரணம் தொடர்பாக போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர், மாணவன் இறப்பு குறித்து மருத்துவர்களும் பரிசோதனை செய்து வந்தனர்.
இந்நிலையில், தர்ஷன் 4 மணி நேரம் ஹெட்போனில் அதிக சத்தம் வைத்து கொண்டு கேம் விளையாடியதால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மாணவன் கோமா நிலைக்கு சென்றதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்தனர்.