நெல்லையில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நெல்லை மாவட்டத்தில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தராவிட்டுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவையடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, வருகிற 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தினால் சிறு வியாபாரிகருக்களுக்கு, ரூ.500 முதல் ரூ.5,000 அபராதமும், பெரிய வியாபாரிகளுக்கு ரூ.5,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.