தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடல் அமைச்சர் மெய்யநாதன் தகவல்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டார்.
இதன்பின் செய்தியாள்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 நபர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3.98 கோடி காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் ரூ.2 கோடி பரிசளித்திருக்கிறார் என்றார்.
அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தபட்சம் 75 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் அடுத்த ஆண்டிற்குள் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்யப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் அரசு விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் தயாரித்த 3,000 தொழிற்சாலைகள் மூடப்பட்டன என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…