பிளாஸ்டிக் தடை:முதல்வருடன் அதிகாரிகள் ஆலோசனை …!
பிளாஸ்டிக் பை தடையை நிறைவேற்றுவது பற்றி முதல்வருடன் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் , பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் , பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கொடி என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக் பை தடையை நிறைவேற்றுவது பற்றி முதலமைச்சர் பழனிசாமியுடன் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது.