பாட புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…
சென்னை:-
பள்ளி பாட புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு இடம் பெறும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஜனவரி மாதத்தில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை இந்தியாவில் முதல் முறையாக இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 320பள்ளிகளில் இதற்கான பணிகள் துவங்குகிறது.
இதற்கான பணிகள் ஒருவாரத்தில் துவங்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள், எப்படி இதனை தவிர்ப்பது என்று கையேடு வழங்குகிறோம். இதன்அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் அதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடக்கும்.
ஜனவரி மாதம் முதல் முதலமைச்சரின் அறிவிப்பு முழுமையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும். தனியார் பள்ளிகளுக்கு இது குறித்து இயக்குநர் மூலம் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இதனை தனியார் பள்ளிகள் பின்பற்றுவார்கள். வருகின்ற பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9 பாட பிரிவு மூன்றாவது பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து இடபெறவுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
DINASUVADU