தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி..ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம் – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வருகிறத. பிளாஸ்மா சிகிச்சை நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் அமைக்கப்பட்ட பிளாஸ்மா வங்கியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
இந்த பிளாஸ்மா வங்கி இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்து இரண்டாவதாக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சை செய்பர்வர்கள் 18 வயது முதல் 65 வயதுள்ளவர் வரை பிளாஸ்மா தானம் கொடுக்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் அளிக்கலாம். சிறப்பு பிளாஸ்மா வங்கி மக்களுக்கு அர்ப்பணிக்க பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையைத் தொடர்ந்து திருச்சி, நெல்லை, மதுரையிலும் பிளாஸ்மா வங்கி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.