கொரோனா நோயிற்கு பிளாஸ்மா சிகிச்சை ! அனுமதிகோரிய தமிழக அரசு

Default Image

கொரோனா-வை விரட்ட பிளாஸ்மா சிகிச்சையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில், உள்ள பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அதை மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கொரோனா நோயாளியின் உடலில் செலுத்தலாம்.இவ்வாறு சிகிச்சை அளிப்பதன் மூலம், அந்த நபருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இதன் மூலம் அவரை குணப்படுத்த முடியும்.ஏனென்றால் அவருக்கு கொரோனா நோய் ஏற்பட்ட சமயத்தில் கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.மேலும் கொரோனா புதிய நோய் என்பதால் தான் கொரோனா பாதிப்பில் உள்ளவர்களிடம் இருந்து பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.
கொரோனாவில் இருந்து காக்க முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை முறையை சீனா முதலில் கையில் எடுத்தது.இதன்மூலமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்களில் முன்னேற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சிகிச்சை முறையை இத்தாலி,தென்கொரியா,துருக்கி,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் முதலில் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை செய்ய கேரளா அனுமதி பெற்றது.தற்போது தமிழ்நாடு,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களும் பிளாஸ்மா சிகிச்சை சோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்