கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். இந்த தயாரிப்பு நிலையம் மூலம் விபத்தில் கைகளில், கால்கள் உள்ளிட்ட உடற்பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொருத்தப்படும்.
மேலும், மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் இணைந்து திறந்து வைத்தனர். அதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…
சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…