Jallikattu - Madurai [file image]
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. முகூர்த்தக்கால் நடும் விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.
ஆண்டுதோறும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாள் பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது உலக பிரசித்தி பெற்றவை. இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டை காண தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து கண்டு மகிழ்வர்.
அதன்படி, தை 1ஆம் தேதி, ஜனவரி 15 அன்று அவனியாபுரத்திலும், தை 2ஆம் தேதி ஜனவரி 16 அன்று பாலமேடு பகுதியிலும், ஜனவரி 17ஆம் தேதி கை 3ஆம் தேதியில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில், அலங்காநல்லூரில் மிக சிறப்பாக நடைபெறும்.
பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
இந்நிலையில், அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஊர் மக்களுடன், கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…