மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்வு நடத்த திட்டம் – அமைச்சர் தங்கமணி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாமக்கல் மாவட்டம் குமரபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் தங்கமணி, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 3 மற்றும் 4வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் புதிய மின் இணைப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழிநுட்ப கோளாறுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக கூறினார். மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.