திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் …!ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு
திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது உறுதி என்று தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் கூறுகையில்,சேலத்தில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதில் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள்.எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் திட்டமிட்டபடி நவம்பர் 27ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவது உறுதி. ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது என்றும் தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரணியம் தெரிவித்துள்ளார்.