திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு (return exam) ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்திருந்தார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும்.
இதுபோன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும், ஜனவரி 31 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும். கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதனால், திட்டமிட்டபடி 10, 12 வகுப்புகளுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறுமா? என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…