பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவி வழங்குவதற்கான திட்டம் – அமைச்சர் பாண்டியராஜன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பனை மாநாட்டில், விழிப்புணர்வு ஊர்வலத்தினை அமைச்சர் பாண்டியராஜன், தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், தனது தாத்தா பனை மரம் ஏறியவர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாக தெரிவித்தார். நீர்நிலைகளை பாதுகாத்திட பனை மரம் முக்கிய பங்காற்றுவதாகவும் முதிர்ச்சி அடைந்த பனை மரங்களை விற்பதற்கு அரசு சார்பில் முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வாகனம் வழங்குவது போல் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவி வழங்குவதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கையாக கொடுக்க உள்ளதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், பனை தொழிலாளர் வாரியம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.