விருதுநகர் வன்கொடுமை 30 பேரை விசாரிக்க திட்டம்..!
விருதுநகர் இளம் பெண் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரின் நண்பர்களான 30 பேரை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது.
விருதுநகரில் தனியார் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்துள்ளார். பின்னர், ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவை அவரகள் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று மதுரை மத்திய சிறையில் உள்ள ஹரிஹரன், அகமது, மாடசாமி பிரவீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இவர்கள் 4 பேரையும் 6 நாள்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், விருதுநகர் இளம் பெண் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரின் நண்பர்களான 30 பேரை விசாரிக்க சிபிசிஐடி திட்டமிடப்பட்டுள்ளது.
4 பேர் வைத்துள்ள வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரை விசாரிக்க முடிவு செய்துள்ளனர். வாட்ஸ் அப் குரூப்களில் இளம்பெண் வீடியோ பகிரப்பட்டு உள்ளதா..? என்பது குறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்த உள்ளனர்.