மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாணவர்களின் பள்ளிகள் மூலம் சமைக்கப்படாத உணவுப் பொருட்கள் 15 நாட்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மாணவர்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையற்கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட உணவை வழங்குவது தொடர்பாக திட்டத்தை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சத்துணவு வழங்குவதில் சிரமங்கள் இருக்கலாம். எனவே, குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது தொடர தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், கிராமப்புறங்களில் பஞ்சாயத்துகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…