சென்னையில் 144 இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்க திட்டம் – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சென்னையில் 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் உத்தரவு.
சென்னையில் மழைநீர் தேங்கிய 144 இடங்களில் ரூ.120 கோடி செலவில் 45 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பல்வேறு இடங்கள் கண்டறியப்பட்டு முதல் கட்டமாக 144 இடங்களில் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
45 கி.மீ. நீளத்துக்கு பணிகளை மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் விடுபட்ட மழைநீர் வடிகால்களை இணைக்கவும், பழுந்தடைந்த மழைநீர் வடிகால்களை புதுப்பிக்கவும் திட்டமிட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.