அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2 ஆம் சுற்று கலந்தாய்வு நடத்த திட்டம்!

Default Image

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்த தொழில்நுட்பக் கல்வி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது பொறியியல் படிப்புகளை தவிர்த்து, பலரும் பாலிடெக்னிக் படிக்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் தற்பொழுது 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளது.

அவற்றின்மூலம் தொழில்நுட்ப பட்டயப் படிப்புகளுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் நடப்பாண்டில் 27,721 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றுள் 16 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர்.

மேலும், அந்தந்த கல்லூரியளவில் தரவரிசை பட்டியல் தயாரித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. அதன்மூலம் 8 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இணையவழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.

அதன்மூலம் 8 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு 2 ஆம் சுற்று கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளதகாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்