கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து முதலமைச்சர் பழனிசாமி வைத்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும், 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.சுத்திகரிக்கப்பட்ட நீர் 9 நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
விரைவில் சென்னை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.சென்னைக்கு குழாய் மூலம் கிருஷ்ணா நதிநீரை கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகிறது .சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது. இந்த இணைப்பு திட்டத்திற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…