பெண்களுக்கான புதிய பிரத்யேக திட்டமான பிங்க் ஆட்டோ அறிமுகம்.!
- சென்னையில் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு இயக்குனர் டி.ஜி.பி.ரவி கலந்துகொண்டு உரிமங்களை வழங்கினார்.
- பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. ரவி அவர்கள், சென்னையில் ஃபிங்க் ஆட்டோ என்கிற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது, இது தமிழகம் முழுவது என தெரிவித்தார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் விதமாக பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள 200 பெண்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு இயக்குனர் டி.ஜி.பி.ரவி கலந்துகொண்டு உரிமங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. ரவி அவர்கள், சென்னையில் ஃபிங்க் ஆட்டோ என்கிற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது, இது தமிழகம் முழுவது என தெரிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னை மாநகரத்தில் அதை செயல்படுத்த போகிறார்கள் என்றும், இவர்கள் காவல் துறையினருடன் இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் விரும்புகின்றோம் எனவும், இந்த மகளிர் ஓட்டுநர்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருப்பார்கள் என்றார். மேலும், குழந்தைகள் ஆபாச வீடியோக்கள், தொடர்பாக 600 நபர்களுடைய பட்டியலை தமிழகம் முழுவதும் அனுப்பி இருப்பதாகவும், இதில் ஐந்து நபர்கள் மட்டும் தான் தற்போது வரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக காவல்நிலையங்களுக்கு நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் கூறுகையில், தற்பொழுது பெண்கள் சிறிய குற்றத்தை கூட உடனுக்குடன் தகவலை தெரிவிப்பதாகவும், காவலன் செயலி மூலம் பெண்கள் தகவல்களை அனுப்பி வைப்பதாகவும், அவர் தெரிவித்தார். இதன் மூலம் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போக்ஸோ சட்டத்தின் படி 60 நாட்களில் வழக்குகள் முடிக்கப்படவேண்டும் என்பதால் ஒவ்வொரு காவல்துறை அதிகாரிகளும் கவனமாக விசாரணை செய்து வருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.