காவல்துறையினரை கட்டவிழ்த்துவிட்டு, அராஜகத்தை ஏற்படுத்தி பினராயி விஜயன் குளிர்காய்கிறார்…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
காவல்துறையினரை கட்டவிழ்த்துவிட்டு, அராஜகத்தை ஏற்படுத்தி பினராயி விஜயன் குளிர்காய்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,காவல்துறையினரை கட்டவிழ்த்துவிட்டு, அராஜகத்தை ஏற்படுத்தி பினராயி விஜயன் குளிர்காய்கிறார்.அதேபோல் எம்.ஜே.அக்பர் பதவி விலகியதை மதம் சார்ந்ததாக பார்க்கக் கூடாது, மானம் சார்ந்ததாக பார்க்க வேண்டும்.
மேலும் தரமான குடிநீரை வீடுகளில் அரசே விநியோகிக்க முழு முயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.தண்ணீர் லாரிகள், கேன் தண்ணீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவந்த அரசுக்கு நன்றி என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.