விமானிக்கு உடல்நலக்குறைவு – ஆளுநரின் விமானம் தாமதம்!
சென்னையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை செல்ல இருந்த விமானத்தின் விமானிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், விமானம் புறப்படுவதற்கு தாமதமாகியுள்ளது. 8.25 மணிக்கு கிளம்ப வேண்டிய இண்டிகோ விமானம், மாற்று விமானி வந்தபின் தாமதமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆளுநர் கோவை செல்ல இருந்த விமானம் புறப்பட தயாரானபோது விமானிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் ஒன்றரை மணி தாமதமாகியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள ஆளுநர் ரவி கோவைக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு இன்று வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காண்பித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருதமலை சாலையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தொடர்ந்து தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை முன்வைத்து முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.