நாளை கிரிவலம் ஊர்வலம் செல்ல பக்தர்களுக்கு தடை!
இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மத கோவில்களிலும், மக்கள் கூடி வழிபாட்டில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
இதனையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 7-ம் தேதி அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.