கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம் – விவாசாயிகள் சங்கம்
பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி பால்வள மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என சின்னசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினர் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருந்த நிலையில், அதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை. இந்நிலையில், பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.