“ரஜினிகாந்த் உடல் நிலை சீராக இருக்கிறது.. 2 நாட்களில் வீடு திரும்புவார்” மருத்துவமனை அறிக்கை!
நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். தீவிர, உடல் பரிசோதனைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் ICUவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் TRANSCATHETER முறை மூலம் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது என்றும், ரத்தக்குழாய் வீக்கத்திற்கு STENT பொருத்தி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது, ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – அப்போலோ மருத்துவமனை!#Rajinikanth𓃵 #RajinikanthHealth pic.twitter.com/AvjtkuZUbJ
— Dinasuvadu (@Dinasuvadu) October 1, 2024
இதனிடையே, ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல் நலம் பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த நடிப்பை பொறுத்தவரையில் தற்பொழுது, இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கிய வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். மேலும், லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் நடித்து வருகிறார்.