#BREAKING: உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு ..!

Default Image

உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை  தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், திருநெல்வேலி, மற்றும் தென்காசி மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல்கள் மற்றும் 28 மாவட்டங்களில் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்கான தேர்தல் அறிவிப்பு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் இருந்தால் அதனை பெறுவதற்காக மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் “புகார் மையம்” அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவல் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் 24 ×7 இயங்கும்.

பொது மக்கள் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் சம்பந்தமான புகார்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 என்ற எண்களில் தெரியப்படுத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்