தமிழில் முனைவர்(P.hd) பட்டம் பெற்ற அரசியல் தலைவர்…!
அறியப்படாத நந்தன் என்னும் தலைப்பில் தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து 10.10.2017 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான பொது வாய்மொழித் தேர்வை எதிர்கொண்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் .பின்பு தனது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் முன்னிலையில் மாண்புமிகு தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தரிடமிருந்து முனைவர் பட்டத்துக்கான சான்றிதழைப் பெற்றார். அந்த பட்டமளிப்பு விழாவில் ஆய்வு நெறியாளர் சாம்பசிவம் உதயசூரியன்,தேர்வாளர் அ. ராமசாமி, பதிவாளர், துறைத் தலைவர் குறிஞ்சி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.