இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம் – பொறியியல் மாணவர் சேர்க்கை!
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை 1.63 லட்சம் இளநிலை படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.12 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு 457 பேருக்கு முதல் கட்டமாக நடத்தப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டது. தற்போது பொது பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 8ம் தேதி தொடங்கியது.இதற்கான முதல் சுற்றில் பங்கேற்ற 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் அவர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
95 சதவீதமானவர்கள் கட்டணம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக 22,902 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி மாணவர்கள் இன்று முதல் பதினைந்தாம் தேதி வரைக்கும் கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.