இன்று தமிழகத்தில் 4 – ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் …!
இன்று தமிழகத்தில் 4 – ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை மூன்று கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 12, 19, 26 ஆகிய மூன்று தினங்களும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
தற்பொழுதும், தமிழகத்தில் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. 20 ஆயிரம் பகுதிகளில் நடக்கக்கூடிய இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் நடத்துவதன் மூலமாக மொத்தம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் எண்ணிக்கை 1.50 கோடியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.