தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி காலியாக உள்ள 91,975 பதவி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.இந்த காலியிடங்களில் முதல்கட்டமாக 45,336 பதவி இடங்களுக்கான தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.
நேற்று 46,639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பின்பு காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டது .மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற 2-ஆம் கட்ட தேர்தலில் 77.73 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…