திட்டமிட்டு பெட்ரோல் குண்டு வீச்சு.! முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்.? எச்.ராஜா விமர்சனம்.!

Default Image

என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது PFI அமைப்பினர் திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.- பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றசாட்டு. 

தமிழகத்தில் சமீப நாட்களில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஒரு சில ஊர்களில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் வீடுகளில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசும் சம்பங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை தடுக்க காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்தும் வருகின்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பாஜக முதல தலைவர் எச்.ராஜா தனது கண்டங்களை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், ‘ தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் மீது பிஎப்ஐ-யினர் (பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா ) திட்டமிட்டு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும், ‘ தொடர் பெட்ரோல் குண்டு சம்பவங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.’ எனவும் தனது குற்றசாட்டையும் முன்வைத்தார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்