10 ரூபாய் நாணயம் செல்லாது எனக் கூறி, இளைஞரின் வாகனத்தை பறிக்க முயன்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, முள்ளிபாலாற்று கரையோரம் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த, 25 ஏக்கர் நிலத்தை மீட்டு, ஸ்ரீகாந்த் என்ற இளைஞர் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
இந்த செடிகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாயத்துவதற்காக, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வழியில் பெட்ரோல் போடுவதற்காக, அருகி இருந்த பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று ரூ.50-க்கும் பெட்ரோல் போடுமாறு கூறி அவர்களிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது அதில் இருந்த 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி, ஸ்ரீகாந்தின் வாகனத்தை பங்க் ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 10 ரூபாய் நாணயத்தை பங்கின் வாங்கி கணக்கில் செலுத்தியபின் வாகனத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அருகில் உள்ள வங்கிக்கு சென்று, பெட்ரோல் பங்கின் வாங்கி கணக்கில் செலுத்தினார்.இதுகுறித்து, கோட்டாட்சியாருக்கு அவர் தகவலளித்த நிலையில், அவரின் வாகனம் மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…