சென்னை:இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69-க்கு விற்பனை.
பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
மீண்டும் உயர்வு:
இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.96.76-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 9 நாட்களில் 8 வது முறையாக பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளன.அதன்படி,கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.29 ஆகவும் ,டீசல் விலை லிட்டருக்கு ரூ.5.33 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…