“பெட்ரோலை பரிசளித்து”திருமண வாழ்த்து “நூதன எதிர்ப்பு” தெரிவித்து அசத்திய கல்யாணம்…!!

பெட்ரோல் விலை தொடர் உயர்வின் காரணமாக புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர் தம்பதியின் நண்பர்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராச்சி கிராமத்தில் இளஞ்செழியன் ,கனிமொழி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.தம்பதிகளின் திருமண வரவேற்வு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.இதில் உறவினர்கள்,அக்கம்பக்கத்தினர் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த தம்பதியின் நண்பர் பிரபு மற்றும் தீபா தம்பதியினர் புதுமணதம்பதிகளுக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர்.இதனை கண்டு அங்கிருந்த அனைவரும் உற்சாகத்தோடு கை தட்டினர்.
பெட்ரொல் டீசல் விலை உயர்வு குறித்து இந்த நூதன விழிப்புணர்வு அனைவரின் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் உயரும் பெட்ரொல் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்க படுகின்றனர்.
ஆனால் பெட்ரொல் டீசல் விலை குறித்து எந்த ஒரு முடிவையும் மத்தியரசு எடுக்காமல் நாளுக்கு நாள் உயரும் பெட்ரொல் டீசல் விலையை ஊக்குவித்து வருவது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது அந்த வெளிப்பாடே இந்த நூதன திருமண பரிசாகும்.மக்கள் விழிப்பில் உள்ளனர் அரசு தான் விழிக்காமல் தூக்கத்தில் உள்ளது.
DINASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024