சென்னையில் இன்று (அக்-16), 148 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 9.50 ரூபாயும், டீசல் விலை கிட்டத்தட்ட 7 ரூபாயும் குறைந்தது. அதன் பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை.
இதனைத்தொடர்ந்து மே 22ம் தேதி பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு 148 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று(அக்-16) 148-வது நாளாக பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…