பெட்ரோல், டீசல் விலை உயர்வு …!மத்திய அரசு நினைத்தால் முடியும் …!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் உள்ளது .பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை சில மாதங்களுக்கு முன்னர்தான் மத்திய அரசு குறைத்தது என்று கூறினார்.
இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விற்பனையில் மாநில அரசை விட மத்திய அரசுக்கு மும்மடங்கு வரி கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.