வரும் 22-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மீதான காலால் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலை சமீப காலமாக அதிகரித்து வண்ணம் தான் உள்ளது. இந்த நிலையில், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசியல் கட்சியினர் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், கடந்த 4ஆம் தேதி தீபாவளியன்று மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து, பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 11 ரூபாயும் குறைந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ‘பெட்ரோல் டீசல் மீதான காலால் வரியை குறைக்க வலியுறுத்தி கடந்த 10-ஆம் தேதி பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மழை உள்ளிட்ட சில காரணங்களால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை அடுத்து, வரும் 22-ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை மீதான காலால் வரியை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…