பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு – தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்!

Default Image

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதன்படி, 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்ந்து வரும் நேரத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கைக்கு பதிலாக, அதன் விலையை மேலும் உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth
Wikki Nayan
AUS vs IND - Session 1